தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி, காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியவர் பட்டு கோட்டை கல்யாண சுந்தரனார். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டவை.
தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி, காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியவர் பட்டு கோட்டை கல்யாண சுந்தரனார். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டவை.
விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் என 17 பரிமாணங்களை கொண்டு விளங்கியவர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடித்து ஐந்து மாதங்களில் தனது 29-வது வயதில் மரணமடைந்தார். இவர் இறக்கும் போது இவருடைய மனைவி கௌரவாம்பாள் கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் தற்போது இவருடைய மனைவி கௌரவம்மாள், கணவர் மறைந்து 60 வருடங்கள் கழித்து நேற்று தன்னுடைய 79 ஆவது வயதில் காலமானார். வயது மூப்பு மற்றும் உடல் நல கோளாறு காரணமாக கலாமார் என இவருடைய உறவினர்கள் தெரிவித்தனர். இவருடைய உடல், சொந்த ஊரான பட்டு கோட்டையில் தகனம் செய்யப்பட்டது.