துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பட்டாஸ்'. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், சினேகா, மெஹரின் பிர்சடா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்கின்றனர். 'புதுப்பேட்டை' படத்திற்குப் பிறகு, தனுஷுடன் சினேகா இணைந்திருக்கும் படம் இது. 'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிகபிரம்மாண்டமாக உருவாகும் 'பட்டாஸ்' படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர். 

அந்தப் படத்தில் தனுஷ் பாடியிருக்கும் "ச்சில் ப்ரோ" என்ற பாடல் ட்விட்டர் மற்றும் யூ-டியூப்பில் ட்ரெண்டிங்கில் வெறித்தனம் காட்டி வருகிறது.2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பட்டாஸ் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருதினங்களுக்கு முன்பு ஷூட்டிங் நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், படக்குழுவினர் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலையில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு பக்கம் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பட்டாஸ் படத்தின் புரோமோஷனுக்காக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, தனுஷ் ரசிகர்களை வெறி கிளப்பியுள்ளது. 

சமீபத்தில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் ஹீரோ கேம் என்ற பெயரில் வீடியோ கேம் ஒன்றை ரிலீஸ் செய்து புதுவித புரோமோஷனில் இறங்கியது. இதேபோன்று தமிழக மக்களை மிகவும் கவர்ந்த டிக்-டாக்கை பயன்படுத்தி பட்டாஸ் படக்குழு புரோமோஷனில் இறங்கியுள்ளது. 

"ச்சில் புரோ" பாடலில் தனுஷ் செய்துள்ள மூவ்வை டிக்-டாக் வீடியோவாக பதிவு செய்து, #ChillBroChallenge என்ற ஹேஷ்டேக்குடன் டுவிட்டரில் பதிவிட வேண்டும். மேலும் அந்த வீடியோவை @LahariMusic & @SathyaJyothi_ நிறுவனங்களின் டுவிட்டர் கணக்குடன் டேக் செய்ய வேண்டும். அதில் சிறப்பாக நடனமாடியுள்ளவர்களை தேர்வு செய்து ஸ்மார்ட் போன் பரிசளிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட தனுஷ் ரசிகர்கள், தங்களது திறமையை காட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.