நடிகர் தனுஷ் துரைசெந்தில் குமார் இயக்கத்தில், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'பட்டாஸ்'. ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளனர்.

இந்தப்படத்தில் சினேகா தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதே போல் மெஹரின் பிரசான்டா,  மற்றொரு நாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 16-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தற்போது, நடிகர் தனுஷ் ரசிகர்களை குதூகலமாக்கும் விதமாக பொங்கல் விருந்தின் அட்வான்ஸாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'மொரட்டு தமிழன்' பாடல் லிரிகல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முரட்டு தமிழ் லிரிக்கல் வீடியோ இதோ...