Asianet News TamilAsianet News Tamil

சினிமாவாகிறது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு... யார் இயக்கப்போறாங்க தெரியுமா?

சுதந்திர போராட்ட வீரரும், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படம் விரைவில் தயாராக உள்ளது. 

Pasumpon muthuramalinga Thevar Biopic Tittle Released
Author
Chennai, First Published May 31, 2020, 6:49 PM IST

தமிழ் சினிமாவில் எப்போதுமே பயோபிக் எனப்படும் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு தனி மதிப்பு உண்டு. சமீபத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் குயின் என்ற பெயரில் வெப் சீரிஸாக வெளியிட்டார். ரம்யா கிருஷ்ணன், அனிகா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்த அந்த தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, மதுபாலா உள்ளிட்டோர் நடிப்பில் தலைவி படத்தை இயக்கி வருகிறார்.

Pasumpon muthuramalinga Thevar Biopic Tittle Released

வழக்குகள், சர்ச்சைகளை கடந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விவேகானந்தரின் தாசராகவும், நேதாஜியின் நேசராகவும் விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர். தென்மாவட்ட வருடா, வருடம் தேவர் ஜெயந்தி, குருபூஜை நடத்தி வழிபாடு நடத்தும் அளவிற்கு தெய்வத்திற்கு சமமாக நினைக்கின்றனர். சுதந்திர போராட்ட வீரரும், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படம் விரைவில் தயாராக உள்ளது. 

Pasumpon muthuramalinga Thevar Biopic Tittle Released

தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ள இந்த படத்தில் ஜெ.எம்.பஷீர் என்பவர் தேவராக நடிக்க உள்ளார். விஜயகாந்தை வைத்து உழவன் மகன், ஊமை விழிகள், செந்தூர பூவே ஆகிய படங்களை இயக்கிய அரவிந்தராஜ் இந்த படத்தை இயக்க உள்ளார். ஏ.எம்.செளத்ரி என்பவர் படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios