லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ''மாஸ்டர்'' படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இதில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி சாந்தனு, கெளரி கிஷன், ஆண்ட்ரியா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துவருகிறது. இதுவரை படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், காதலர் தின சிறப்பு பரிசாக வெளியான ''குட்டி கதை'' பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டாகிவிட்டது. விஜய்யின் 64வது படமான இதை தமிழ் புத்தாண்டிற்கு முன்னதாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 பற்றி தான் ஊரெல்லாம் ஒரே பேச்சாக உள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் முதல் பேரரசு வரை தளபதி 65 படத்தை இயக்க தயாராக இருப்பதாக கூறியுள்ள நிலையில், விஜய் யார் பெயரை டிக் அடிக்க போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இதையும் படிங்க: கடலையே கொந்தளிக்க வைத்த கஸ்தூரி... கடற்கரையில் செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தி அதகளம்...!

இதனிடையே எதையும் மாத்தியோசிக்கும் இயக்குநர் மற்றும் நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் விஜய் நடித்தால் எப்படி இருக்கும் என்று தளபதி ரசிகர்களுக்கு ஒரு ஆசை தோன்றியுள்ளது. தனது ஆசையை விஜய் ரசிகர் ஒருவர் ட்வீட் செய்து, அதை பார்த்திபனுக்கு டேக் செய்துள்ளார். 

அதற்கு பதிலளித்துள்ள பார்த்திபன், Massக்கு MASTER-ஐ பிடிக்கும் Masterக்கு இந்த நண்பனைப் பிடிக்கும்.('நண்பன்' படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார்-'அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார்) நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்! என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:  இந்த கேவலமான போட்டோவுக்கு முழுசா அவுத்துட்டு போஸ் கொடுத்திருக்கலாம்... பிகினியில் கடுப்பேற்றிய மீரா மிதுன்...!

பார்த்திபன் பொடி வைத்து ட்வீட் செய்துள்ளதை பார்த்தால் விரைவில் அவர் விஜய்யை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாக அவரே சொல்லி இருப்பதால், தளபதி 65 பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேற லெவலுக்கு உயர்ந்துள்ளது.