பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரத்தின் முடிவில், முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பாத்திமா பாபு வெளியேறினார். ஆனால் இவர் வெளியேறுவார் என்று யாரும் எதிர்பாராத நிலையில், இவரில் எலிமினேஷன் பாத்திமா பாபுவின் ஆர்மியை சேர்ந்தவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து, அனைத்து ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அவரிடம் பலர் வித்தியாசமான கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டி அளித்த பார்த்திமாவிடம், கவின் லாஸ்லியாவை சுற்றி சுற்றி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பாத்திமா, கவின் பிக்பாஸ் வீட்டில் உள்ள நான்கு பெண்கள் பின்னல் காமெடிக்காக தான் சுற்றி வருகிறார். அவர்களுக்காக பேச போய், இவர் சிக்கி கொள்கிறார். ஆனால் அவர் சீரியஸாக மாற வேண்டும். லாஸ்லியாவிடம் கவின் நெருங்கி பேசுவதை தெரிந்து கொண்டு, அவர் தனக்கு சரியானவர் இல்லை என அவரே புரிந்து கொண்டு விலகுகிறார் என பதில் கொடுத்துள்ளார்.