தமிழகத்தில் தற்போது வரை யாரும் எதிர்பாராத பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவின் வலி கூட இன்னும் பலரது நெஞ்சங்களில் இருந்து நீங்காத நிலையில்.
தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் அதை விட மக்களுக்கு அதிக வலியை கொடுத்துள்ளது.
இதுகுறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி நடிகர் கமல்ஹாசன், விசு, கங்கை அமரன், ஸ்ரீப்ரியா, கௌதமி போன்ற திரையுலகினர்களும் தைரியமாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் தற்போதைய அரசியல் நிலை குறித்து கவிதை எழுதி அதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் எழுதிய கவிதை இதோ...
முதன்முறையாக ... மறைந்த
முதல்வர் சமாதிக்கு சென்றேன்.
தியானிக்க அல்ல... ஜீரணிக்க !
மரணத்தின் மர்மம்,
மூன்ரெழுத்துக்காரரின் 75 நாள்
மௌனத்தின் மாமர்மம்,
அரசியல் அதர்மங்கள்,
ரிசார்ட்டில் Mla-க்கள்,
ரிமோட்டாய் கோடிகள்,
நடப்பவை நடந்தவை....
விளங்காமல் கலங்கரை
விளக்கத்திலிருந்து நடந்து
சென்றேன். கட்சிகளின்
கல்மிஷங்கள் இல்லாத
Mgr-ன் விசுவாசிகள்,
அதிமுக தொண்டர்கள்,
அறியா பொதுஜனங்கள்
அணையா தீபங்களாய்
அங்கே ஒளியூட்டல் !
அம்மா'என்றழைக்கப்பட்டவரின்
ஆன்மா என்ன நினைக்கும் ?
எனக்கும் அவருக்குமான சில
சந்திப்புகளும் சம்பாஷைனைகளும்
வந்து போயின நினைவில்!
நம்பிக்கை துரோகமும்
துரோகிகளின் நம்பிக்கையும்
எதுவுமே சகிக்கல!
திருமதி சசிகலாவோ
திருமிகு OPS-ஸோ
ஆட்சியமைப்பது
சட்ட பூர்வமேயாகையால்
சட்டு புட்டுன்னு
சட்டசபைக்கு வந்து
மக்கள் பணி பாருங்கள்!
எம்மக்கள் திருந்திவிட்டார்கள்!!!
மறுதேர்தலை சந்திக்க வாருங்கள் !
நோட்டுக்காக அல்ல
நாட்டுக்காகவே ஓட்டு!
