தமிழகம் மற்றும் புதுவையில்,  நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதனால் கடைசி நாளான இன்று அனைத்து கட்சிகளும் பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க,  பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  உரிய ரசீது இல்லாமல், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம், நகை, பரிசுப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

உரிய ஆதாரம் காட்டிய பிறகே உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் நடவடிக்கைகளும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் யாருக்கு வாக்களிப்பது என ஒரு தரப்பினர் முடிவு செய்திருந்தாலும், மற்றொரு தரப்பினர் சற்று குழப்பமான மனநிலையுடனே உள்ளனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும் சமூக சேவகருமான பார்த்திபன் தன்னுடைய ஓட்டு யாருக்கு என்பது குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.  இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில்....

மாம்பழமா? மாபெரும் பழமா?  பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகள்.  தேர்தல்=தேத்தல்(பணம்).

வஞ்சிரத்தை வாங்கிக் கொண்டு, நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள். அது கூட திமிங்கிலத்தை வேட்டைக்கு தான். காசு வாங்காமல் ஓட்டு போடுவோம், மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு என பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு ரசிகர்களை குழப்பும் படியாக இருந்தாலும், பார்த்திபன் சொல்ல வருவது என்ன என்பது தெளிவாக புரிகிறது. இதற்கு பலர் தங்களுடைய ஆதரவையும் எதிர்ப்பையும் வழக்கம்போல் தெரிவித்து வருகின்றனர்.