நடிகர் பார்த்திபன்:

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவராலும் அறியப்பட்டவர் பார்த்திபன். இவருடைய இரண்டாவது மகள் கீர்த்தனாவிற்கும், அவருடைய காதலர் அக்ஷய் என்பவருக்கும் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. 

கீர்த்தனாவின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட, கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

கீர்த்தனா இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா வாய்ப்புகள்:

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்தபோது அந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டார். மேலும் இவர் இயக்குனர் மணிரத்னத்திடம் தற்போது உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். 

திருமணம்:

ஏற்கனவே கடத்த சில மாதங்களுக்கு முன் கீர்த்தனாவிற்கும் - அக்ஷய்க்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது இவர்களுடைய திருமணம் நடந்துள்ளது. அக்ஷய் ஒரு இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.