கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. பிருத்விராஜ், பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.  இந்த படத்தின் இயக்குநரான சச்சி கடந்த ஜூன் 18ம் தேதி காலமானார்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற  “அய்யப்பனும் கோஷியும்” தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தமிழ் நடிகர்களும் ஆர்வமாக உள்ளனர். இதில் சரத்குமார் - சசிகுமார், சசிகுமார்  - ஆர்யா என பலர் நடிக்க உள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. ஏன் சகோதரர்களான சூர்யா - கார்த்தி கூட நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பு தகவல்கள் கிளம்பின. ஆனால் சூர்யா - கார்த்தி தரப்பில் இருந்து அதற்கு மறுப்பு கூறப்பட்டது. இந்நிலையில், அந்த படத்தில் சிம்புவும், பார்த்திபனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க: இன்று சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷமான நாளாம்... நீங்கள் பார்த்திடாத புகைப்படங்களுடன் அசத்தல் தகவல்கள் !

முன்னாள் ராணுவ வீரர் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோர் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்ட இந்த கதையில், பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் சிம்புவும், பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாகவே இயக்குநர் சச்சி தன்னை அய்யப்பனும் கோஷியும் படத்தின் பிஜு மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டார் என பார்த்திபனே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 

 

இதையும் படிங்க: அனிகாவின் ஓணம் ஸ்பெஷல் ட்ரீட்... யாருமே எதிர்பார்க்காத லுக்கில் அதிரடி காட்டும் போட்டோஸ்...!

தற்போது அந்த படத்தில் கார்த்தியுடன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  தீயாய் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பார்த்திபன் விளக்கமளித்துள்ளார். "இச்செய்தி நற்செய்தி ஆகலாம்!ஆனால் இதுவரை தயாரிப்பாளர் திரு கதிரேசனை தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள். எனவே..." என அவர் கூறி இருக்கிறார். அதனால் அவரை தயாரிப்பாளர் அணுகவே இல்லை என்பது உறுதி ஆகி உள்ளது. மறைந்த இயக்குநர் சச்சி கூட பேட்டி ஒன்றில்,  அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் பார்த்திபன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.