"ஒத்த செருப்பு" படம் குறித்து ஒரு இணைய ஊடகத்திற்கு பேட்டியளித்த நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஷ்யமான பதிலளித்தார். 

அப்போது; பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இயக்குனர் சேரனை பற்றி பார்த்திபனிடம் கேட்டபோது, ஒத்தசெருப்பு படத்தில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை என்று கூறினார். ஆகையால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன் நடவடிக்கைகளை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை, ஆனால், சேரன் ஒரு சின்சியரான இயக்குனர், அவர் மற்றவர்கள் காயப்படுவதை பற்றி கவலையே படமாட்டார்.

எடுத்துக்காட்டுக்கு, ஒருதடவை ஒரு குப்பை படத்தை பார்த்த சேரன், என்னய்யா பார்த்திபன் மாதிரி படம் எடுத்துருக்கீங்க என கேட்டு காயப்படுத்தினார். அந்த வகையில் அவர் யார் காயப்பட்டாலும் அதை பற்றி கவலைப்படமாட்டார். 

அவருடைய பாரதிகண்ணம்மா படம் ஜாதி ஒழிப்பு பற்றி சமூகத்தில் அதிகமாக பேசப்பட்ட ஒரு நல்ல படம். அந்த படம் எடுக்கும் சமயத்தில், அவர் ரொம்ப சீரியசாக இருப்பதை உணர்ந்தேன். அதனால் அந்த படத்தில் நானும், வடிவேலும் வேறு ஒரு படத்திற்காக எழுதி வைத்திருந்த காமெடி டிராக்கை பயன்படுத்தி பாரதிகண்ணம்மாவை கொஞ்சம் கலகலப்பாக மாற்றினோம். ஆனால், அதற்கு சேரன் அதற்க்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. என்னோட கதையில் தலையிடுகிறார் என எல்லோரிடமும் சொல்லி பஞ்சாயத்தே வைத்தார்.

 ஆனால் நான் கொடுத்த ஐடியா ஒர்க்கவுட் ஆகிவிட்டது என்றால், அவருக்கு பெயர் கிடைக்காது என சேரன் நினைத்தார். இதனால் அவர் அந்த காமெடி காட்சிகளை படத்தில் வைக்க மறுத்துவிட்டார். நாங்கள் எல்லாம் பேசி அவரை சம்மதிக்க வைத்தோம். 

அதன் பின்பு வெற்றிகொடிக்கட்டு படத்தில் காமெடி சீன்ஸ் உருவாக்கி என்னையும், வடிவேலையும் நடிக்க வைத்தார். அந்த அளவுக்கு ரொம்ப சின்சியரான இயக்குனர் மற்றும் மனிதர் என்றும் கூறினார்.