இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஹிந்தியில் ரிமேக்காக உள்ளது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தன்னுடைய முதல் படத்திலேயே தரமான கதையை இயக்கி, ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு. வெளியான இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்திருந்தார். கதாநாயகனாக கதிர் நடிக்க, கயல் ஆனந்தி ஹீரோயினாக நடித்திருந்தார்.

அம்மாவின் காலுக்கு பக்கத்தில் அப்புராணி போல் அமர்ந்திருக்கும் விஜய்..! சைலன்ட்டாக பதிலடி கொடுத்த தளபதி!

தாழ்த்தப்பட்ட மக்கள் மக்கள் பற்றிய வெளிப்பாடாகவே இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம், தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோக்கர் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த இடுப்ப பார்த்தா ஷகீலாவே ஷை ஆகிடுவாங்க! சேலையை இழுத்து சொருகி சோசியல் மீடியாவை சூடாக்கிய திவ்யா துரைசாமி!

கதிர் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் சதுர்வேதியும் கயல் ஆனந்தி நடித்திருந்தார் கதாபாத்திரத்தில் திருப்தி திம்ரியும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழில்,சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற காஞ்சனா, வீரம், சூரரை போற்று போன்ற படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், தற்போது 'பரியேறும்பெருமாள்' படமும் ரீமைக்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…