Gopi and Sudhakar Movie Oh God Beautiful First Look Poster : பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் சுதாகர் நடிப்பில் உருவாகி வரும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
Gopi and Sudhakar Movie Oh God Beautiful First Look Poster : புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில் பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடிக்கும் ஓ காட் பியூட்டிஃபுல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க, ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் ஜானரில், கொஞ்சம் எமோஷனல் டிராமாவாக உருவாகி வரு படம் தான் “ஓ காட் பியூட்டிஃபுல்”.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் போஸ்டரில் கோபி சார்லி சாப்ளின் லுக்கில் கையில் பொய் சொல்வது எப்படி என்ற புக் வைத்திருப்பது போன்றும், சுதாகர் வாய் கட்டப்பட்ட நிலையில் இன்னொரு சார்லி சாப்ளினாக தராசை ஏந்தியபடி நிற்பது போன்றும் போஸ்டர் இடம் பெற்றுள்ளது. மேலும், சுதாகர் வைத்திருக்கும் தராசில், கண்களை மூடிய குரங்கு பொம்மையும், காதை மூடிய குரங்கு பொம்மையும் இருக்க, இன்னொரு புறம் வாயை மூடி இருக்கும் குரங்கு பொம்மை உள்ளது.
இந்த போஸ்டரை பார்க்கையில் வித்தியாசமாகவும் யோசிக்க வைக்கும் வகையிலான காட்சிகள் நிறைய உள்ளன. ஏற்கனவே பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனல் மூலமாக பிரபலமான கோபி மற்றும் சுதாகர் இருவருமே இப்போது பரிதாபங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகவே இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய படமாக இந்தப் படம் இருக்கும் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி என்றும் உண்மை மட்டுமே நிலையானது என்ற கருத்தையும் வாய்மை வெல்லும் என்ற கருத்தையும் மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படமானது இரு இளைஞர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சொல்லும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அது ஏன் கோபி மற்றும் சுதாகரின் வாழ்க்கையில் நடந்த கதைகளாக இருக்க கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.
இந்தப் படத்தில் கோபி மற்றும் சுதாகர் ஆகியோருடன் இணைந்து VTV கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம், பிரசன்னா, யுவராஜ் கணேசன், ஹரிதா, கௌதம், பாலகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக மட்டுமே படக்குழுவினர் இந்தளவிற்கு கடுமையாக உழைத்திருப்பது போஸ்டரை பார்க்கும் போதே தெரிகிறது. எப்படியும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
