14 வயசு பசங்க எனக்கு பாலியல் மிரட்டல் விடுக்குறாங்க... நடிகை சிம்ரன் பரபரப்பு புகார்

Simran Budharup : பாண்டியா ஸ்டோர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சிம்ரன் புதரூப், தனக்கு பாலியல் மிரட்டல்கள் வருவதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Pandya Store actress Simran Budharup gets rape threats because of her negative character in the serial

தமிழில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்தியில் பாண்டியா ஸ்டோர் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சிம்ரன் புதரூப். இவர் தனக்கு பாலியல் மிரட்டல்கள் வருவதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சிம்ரன் கூறியிருப்பதாவது : சீரியலில் நான் வில்லியாக நடிப்பதை சிலரால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. நான் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எதிராக ஆரம்பத்தில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Pandya Store actress Simran Budharup gets rape threats because of her negative character in the serial

ஆனால் அது தற்போது எல்லைமீறி போய்விட்டது. என்னை பாலியல் வன்கொடுமை செய்யப்போவதாகவும், கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டுகின்றனர். என்னைப்பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பேசுகிறார்கள். இதனால் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் ஒன்றை அளித்துள்ளேன்.

எனக்கு மிரட்டல் விடுப்பவர்கள் 14 வயது சிறுவர்கள். பெற்றோர்கள் அவர்களுக்கு படிப்பதற்காக வாங்கிக் கொடுத்துள்ள மொபைல் போனை அவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகையின் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... ஆர்.ஜே.பாலாஜிக்கு ஹாட்ரிக் ஹிட் கிடைத்ததா..! வீட்ல விசேஷம் படம் எப்படி இருக்கு? - டுவிட்டர் விமர்சனம் இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios