நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'சூர்யா 40 ' படத்தை, சூர்யாவின் சகோதரர் கார்த்தியின் படத்தோடு ஒப்பிட்டு பேசியுள்ளார். 

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'சூர்யா 40 ' படத்தை, சூர்யாவின் சகோதரர் கார்த்தியின் படத்தோடு ஒப்பிட்டு பேசியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடைசியாக நடிகர் சூர்யா நடிப்பில், ஓடிடி தலத்தில் வெளியான 'சூரரை போற்று' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க பட்டு, 100 படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் வெளியேறியது. இது இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகவே பார்க்கப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து, சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் 40 ஆவது படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' ஆகிய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

திடீர் என கொரோனா தொற்றுக்கு ஆளாகி இதையடுத்து, உரிய சிகிச்சைக்கு பின் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணடமடைந்தார். பின்னர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமான '40 'ஆவது படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வந்தார். இந்த படத்தில் இருந்து வெளியான போஸ்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் குறித்து சமீபத்தில், இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்... " தன்னுடைய இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருந்த 'கடைக்குட்டி சிங்கம் ' படம் எப்படி சிறப்பாக வந்திருந்ததோ, அதே போல் சூர்யாவின் 40 படமும் சிறப்பாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார். 

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக, டாக்டர், டான் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரும் பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி, உள்பட பலர் நடித்து வருகின்றனர். டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.