வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்ல எனக்கு நேர்ந்த அவமானம்... கலங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்

varisu : வாரிசு படத்தில் நடிக்க வருமாறு அழைத்து தன்னை அவமானப்படுத்திவிட்டதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Pandian Stores serial actor Ravichandran shocking complaint against varisu movie team

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, குஷ்பு, பிரபு, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு, சம்யுக்தா, ஷியாம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வாரிசு படத்தில் நடிக்க வருமாறு அழைத்து தன்னை அவமானப்படுத்திவிட்டதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் தந்தையாக நடித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் தான் வாரிசு படக்குழு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது : “வாரிசு படத்தின் இணை இயக்குனர் ஒருவர் எனக்கு போன் செய்து படத்தில் ஒரு ரோல் இருப்பதாகவும், அதற்காக போட்டோவை அனுப்புமாறு கேட்டுள்ளார். இதையடுத்து நேரில் வர சொல்லியும் டெஸ்ட் ஷூட் பண்ணாங்க. அதெல்லாம் ஓகே ஆன பின்னர் மறுநாளே ஷூட்டிங் வர சொன்னார்கள்.

இதையும் படியுங்கள்... இந்த அநீதியை இன்னொரு தாய்க்கு இழைக்காதீர்கள்..! வலி... வேதனையோடு.. சந்திரமுகி பொம்மி போட்ட பழைய பதிவு!

Pandian Stores serial actor Ravichandran shocking complaint against varisu movie team

பெரிய வாய்ப்பை மிஸ் பண்ணிவிடக் கூடாது என்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குனரிடம் விவரத்தை கூறினேன். அவருக்கு செல்ல அனுமதித்தார். மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய், மேக்கப், காஷ்டியூம் எல்லாம் போட்டு இயக்குனரை பார்த்தேன், அவர் கேரவனில் அமர சொன்னார். சிறிது நேரம் கழித்து மேனஜர் வந்து, என்னை இயக்குனர் கிளம்ப சொன்னதாக கூறினார்.

எதற்கு என கேட்டபோது, உங்களது தோற்றத்தை பார்க்கும் போது ரிச்சாக உள்ளது. படத்தின் கேரக்டர் படி பாவமான தோற்றம் உள்ளவர் தான் வேண்டும். அதனால நீங்க அதுக்கு செட் ஆக மாட்டீங்கன்னு சொல்லி இயக்குனர் உங்கள கிளம்ப சொல்லிட்டாரு. நடிக்க வரலைன்னு சொல்லி அனுப்புனா கூட பரவாயில்ல, போட்டோல பார்த்து நான் செட் ஆகமாட்டேன்னு சொன்னது எனக்கு ரொம்ப அவமானமா இருந்துச்சு. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். இந்த விஷயமெல்லாம் நடிகர் விஜய்க்கு தெரியாது” என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார் ரவிச்சந்திரன்.

இதையும் படியுங்கள்... ஜெயம் ரவியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்..எந்த படத்தில் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios