Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எங்களுக்கு நிச்சயதார்த்த ஏற்படுகளால் ரூ.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி பாண்டியனின் அக்காவும், மாமாவும் அந்த தொகையை திரும்ப கேட்க வந்துள்ளனர்ர்.
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இதில், பாண்டியனின் மகள் ரகசிய திருமணம் செய்து கொண்டதும், பாண்டியனுக்கு பேரனோ, பேத்தியோ பிறக்க இருப்பதும் என்று மாறி மாறி கஷ்டமான செய்தியும், சந்தோஷமான செய்தியும் நடந்தது. அரசியின் திருமணம் நின்றதைத் தொடர்ந்து கல்யாணத்திற்கு கார் வாங்க வைத்திருந்த பணத்தை கல்யாணம் நின்றதைத் தொடர்ந்து செந்தில் தனது தேவைக்கு பயன்படுத்திக் கொண்டார்.
அதாவது, அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது மாமனாரிடம் ரூ.10 லட்சம் கொடுத்தார். அரசு வேலை கிடைக்க இந்த மாதிரி ரூ.10 லட்சம் கேட்கிறார்கள் என்று அப்பாவிடம் கேட்டு அவர் முடியாது என்று சொல்லிவிட்டார். அதனால், மன வேதனையில் இருந்த செந்தில் ஏற்கனவே ஒரு முறை மாமனாரிடம் ரூ.10 லட்சம் கொடுக்க சென்றார். அதன் பிறகு மனது மாறி அந்த பணத்தை கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்துவிட்டார். ஆனால், இந்த முறை அவர் வங்கியில் செலுத்த வேண்டிய ரூ.10 லட்சம் பணத்தை நேராக கொண்டு சென்று தனது மாமானாரிடம் கொடுத்துவிட்டார்.
அதன் பிறகு தனது மனைவி மீனாவிடம் இதைப் பற்றி கூற அவரோ பதற்றத்தில் செந்திலை சத்தம் போட்டார். அந்தப் பணத்தை திரும்ப பெற சொன்னார். ஆனால் செந்திலின் மாமனார் அந்த பணத்தை உரியவரிடம் கொடுத்துவிட்டதாக கூறினார். எப்போது வேலை கிடைக்கும் என்று சொல்லவில்லை. இருந்த போதிலும் அந்த பணத்தை பாண்டியன் கேட்பதற்கு முன்னதாக எப்படியாவது வங்கியில் கட்டிவிட வேண்டும் என்று மீனா முயற்சித்தார். அதற்கு பலன் கிடைக்கவில்லை. அலுவலகத்தில் லோனுக்கு முயற்சி செய்தார். எனினும் அது இப்போது வரை கை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலும், மீனாவும் ரூ.10 லட்சம் பணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நீங்கள் பணம் கொடுத்ததில் எனக்கு உடன்பாடில்லை என்றார். அப்பாவிடம் கேட்டீர்களா என்று கேட்க அதற்கு இல்லை என்றார். மேலும், அப்போதே நான் சொன்னேன், அவர் ரூ.10 லட்சம் என்று சொன்னதுமே நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இப்போது அதைப் பற்றி பேசி எந்த பிரயோஜனும் இல்லை என்றார்.
இந்த நிலையில் தான் அரசிக்கு திருமண ஏற்பாடுகள் செய்ததில் தங்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனை திரும்ப கொடுக்க வேண்டும் என்று பாண்டியனின் அக்காவும், மாமாவும் கேட்க வந்தனர். நிச்சயத்திற்கு பெரிய மண்டபம், சொந்தக்காரர்களுக்கு துணிமணிகள், போட்டோகிராஃபர், கார், பஸ் என்று எல்லா சேர்த்து ரூ.10 லட்சம் வந்துவிட்டது என்று கூறி அந்த தொகையை பெற்றுக் கொள்ள வந்தனர்.
இது குறித்து மீனா, தங்கமயில், சரவணன், கதிர் என்று எல்லோரும் ஒவ்வொன்றாக பேச, பாண்டியன் சரி, நான் கொடுத்துவிடுகிறேன் என்றார். நானே கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்ல, இல்ல நாங்களே வந்து வாங்கிக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். இது செந்திலுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பிறகு கடைக்கு சென்ற செந்திலிடம் டெலிவரிக்கு சென்றுவிட்டு வரும் போது வங்கியிலிருந்து பனத்தை எடுத்துக் கொண்டு வா என்று பாண்டியன் கூறினார். இதனால் செந்தில் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது, ஏது செய்துவது என்ற குழப்பத்தில் இதைப் பற்றி கதிரிடம் கூறினார்.
இந்த சூழலில் ஏற்கனவே மீனா தனது அலுவலகத்தில் லோன் வாங்க முடியுமா என்று கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது கதிருக்கும் உண்மை தெரிந்த நிலையில் என்ன நடக்கபோகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. ஒன்று தனது அண்ணனைகாப்பாற்ற பழியை ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. 2ஆவது எப்படியாவது ரூ.10 லட்சம் ரெடி பண்ணி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 514ஆவது எபிசோடு முடிந்தது.
