Pandian Stores 2 Serial Today Episode in Tamil : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 523ஆவது எபிசோடில் பாண்டியனுக்கு எல்லா உண்மையும் தெரிந்து அவர் செந்திலிடம் சண்டையிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Pandian Stores 2 Serial Today Episode in Tamil : விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது இப்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் சுவாரஸ்யமான காட்சிகளுடன் சீரியல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதன்படி இந்த வாரத்தில் செந்திலுக்கு பொதுப்பணித்துறையில் வேலை கிடைத்து, வேலைக்கான ஆர்டர் காப்பியையும் வாங்கி வந்து வீட்டில் பெருமையாக காட்டியுள்ளார்.

செந்திலுக்கு பொதுப்பணித்துறையில் வேலை

தனது மகன் செந்திலுக்கு அவனது திறமைக்கு ஏற்ப அரசு வேலை கிடைத்துவிட்டது என்று கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பெருமையாக பேசி சந்தோஷப்பட்டுள்ளார். அவருக்கு ரூ.10 லட்சம் கொடுத்து தான் வேலை கிடைத்தது என்று பாண்டியனுக்கு தெரியாமல் இருந்தது. எப்படியோ இத்தனை நாள் செந்தில் சமாளித்துவிட்டார். ஆனால் இன்றைய 523ஆவது எபிசோடில் செந்திலின் மாமனார் ரவி வீட்டிற்கு வந்து எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கடையை ஆட்டைய போட பிளான் போடும் பாக்கியம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடானது தங்கமயில் மற்றும் பாக்கியம் காட்சியுடன் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், தங்கமயில் செந்திலுக்கு அரசு வேலை கிடைத்த விஷயத்தை அவரது அம்மாவிற்கு தெரியப்படுத்தினார். மேலும், தனது கணவர் வேலையை விட்டுவிட்டு கடைக்கு வேலைக்கு செல்கிறார் என்றார். அதற்கு பாக்கியமோ ரொம்பவே சந்தோஷப்பட்டார். நல்லது தான் என்றார். எப்படி என்றால், ஏற்கனவே மீனாவுக்கு அரசு வேலை தான். இப்போது செந்திலுக்கும் அரசு வேலை கிடைத்துவிட்டது. அப்போது ஆட்டம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும். இருக்கட்டும், இனிமேல் செந்தில் கடைக்கு வரமாட்டார்.

கதிர், அரசிக்கு சொத்து கிடையாது:

பழனிவேலுவிற்கு அவரது சொத்து நிறைய இருக்கிறது. கதிரை அவரது அப்பா கடைக்குள் சேர்க்கவேமாட்டார். அரசிக்கு சொத்தும் கிடையாது, ஒன்னும் கிடையாது. இந்த சூழலில் உன்னுடைய கணவர் மட்டும் அவரது அப்பாவின் நம்பிக்கையை சம்பாதித்து விட்டார் என்றால் அவருக்கு தான் கடை கிடைக்கும் என்று பாக்கியம் கூறுகிறார். இப்படிய கடையை ஆட்டைய போட தங்கமயில் மற்றும் பாக்கியம் இருவரும் பிளான் பண்ணும் நிலையில், செந்திலின் மாமானார் முதல் முறையாக பாண்டியன் வீட்டிற்கு வருகிறார்.

பாண்டியன் வீட்டிற்கு வந்த செந்திலின் மாமனார்

அவர், பாண்டியனிடம் நீங்கள் கொடுத்த ரூ.10 லட்சம் பணத்தை வைத்து எனக்கு தெரிந்தவரிடம் நான் சிபாரிசு செய்து இந்த வேலையை வாங்க முடிந்தது. ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம் என்று அந்த வேலைக்கு கொடுக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருந்தார்கள். அதுமட்டுமின்றி அரசு அதிகாரிகளும் அந்த வேலையை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று குறியாக இருந்தார்கள் என்றார்.

ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கிய அரசு வேலை

ஆனால், அந்த வேலையை கொடுப்பவர் எனக்கு வேண்டியவர் என்பதால் ரூ.10 லட்சத்திற்கு அந்த வேலையை எனக்கு கொடுத்துவிட்டார் என்றார். இதெல்லாம் நீங்கள் கொடுத்த பணத்தால் தான் வாங்க முடிந்தது என்றார். இதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல எப்படி ரூ.10 லட்சம் வந்தது, எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பாண்டியன் செந்திலிடம் கேட்டார். அவர், உண்மையை சொல்ல வரும் போது மீனா, லோன் வாங்கி கொடுத்ததாக கூறினார்.

எல்லா உண்மையையும் தெரிந்து கொண்ட பாண்டியன்:

காசு கொடுத்து தான் தனது மகனுக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று அடுத்தவர் சொல்லி தான் தனக்கு தெரிகிறது. இதெல்லாம் உனக்கு தேவையா? அது சரி இது உங்களது குடும்பம். நீங்கள் ரெண்டு பேரும் தான். இனிமேல் உங்களுடைய விஷயத்தில் நான் தலையிடமாட்டேன். மீனா உன் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால், நீ இப்படி பண்ணுவ என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று பாண்டியன் மன வேதனையுடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதே போன்று கோமதியும் தன் பங்கிற்கு வருத்தமாக எதுவும் பேசிக் கொள்ளாமல் சென்றுவிட்டார். இப்படி ஆளாளுக்கு செல்ல எல்லா தப்பும் செய்தது செந்தில் தான் என்றும் மீனா எந்த தப்பும் செய்யவில்லை என்றும் பாண்டியனுக்கு இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.