Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 513ஆவது எபிசோடில் பாண்டியன் தனது மகன் கதிரை திட்டுவது போன்ற காட்சியுடன் பரபரப்பாக செல்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Pandian Stores 2 Serial :விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் கதிர் மற்றும் ராஜீ இருவரும் விருப்பமே இல்லாமல் சந்தர்ப்ப சூழல் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் எலியும், பூனையுமாக இருந்த நிலையில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

போலீசாக ஆசைப்பட்ட ராஜீ:

இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்துள்ளனர். ராஜீக்கு போலீசாக வேண்டும் என்பது தான் ஆசை. இதையறிந்த கதிர் அவரை போலீஸ் வேலைக்கு படிக்க வைக்கிறார். மேலும், ரன்னிங்கும் ஓட வைக்கிறார். இதெல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்த காட்சிகளாக இருந்தாலும் இதனுடைய தொடர்ச்சி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 513ஆவது எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம். வெளியில் சென்றிருந்த கதிர் வீட்டிற்கு வந்ததும் தனது அப்பாவிடம் ராஜீ எங்கே என்று கேட்க, அதற்கு பதிலளித்த இரு எங்கே என்று பார்க்கிறேன் என்று உட்கார்ந்திருந்த இடம் அங்கு, இங்கு என்று தேடினார். அப்போது உடனே ராஜீயும் வந்துவிட்டார். இதற்கு கோமதி என்னமா உன்னுடைய புருஷன் கூப்பிட்ட உடனே வந்துவிட்டாய் என்று நக்கலாக கேட்டார்.

ராஜீயை கோச்சிங் கிளாஸ் சேர்த்துவிடும் கதிர்:

ராஜீயை வெளியில் அழைத்துச்செல்ல கதிர் முடிவு செய்தார். இருவரும் வெளியில் சென்றனர். எங்கு என்றால் அது கோச்சிங் செண்டர். ராஜீயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அவரை கோச்சிங் சென் டரில் சேர்த்துவிடுகிறார். அதற்கு பீஸ் மட்டும் ரூ.40 ஆயிரம். அவர் எப்படியாவது எஸ்ஐ ஆக வேண்டும் என்பது தான் கதிருக்கு இப்போது இருக்கும் ஆசை.

இதற்காக தனது படிப்பை பெரிதாக நினைக்காமல் கார் டிரைவராக செல்கிறார். மேலும், ஃபுட் டெலிவரி பண்ணும் வேலையும் செய்கிறார். இதனால் படிப்பில் கவனம் செலுத்தாமல் 4 பாடங்களில் ஃபெயிலாகிவிட்டார். இந்த நிலையில் தான் ராஜீயை கோச்சிங் கிளாஸில் சேர்க்க வந்துள்ளார். அதற்கான பீஸ் மொத்தமாக ரூ.40 ஆயிரமாம். அதனை பாதி பாதியாக கட்டிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

கதிரை திட்டிய பாண்டியன்

இதற்கிடையில் பாண்டியன் கதிருக்கு போன் போடவே உடனே கடைக்கு சென்றார். ராஜீ வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு சென்றால் முத்துவேல் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு கதிர் ராஜீயை கொடுமைப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு பாண்டியன் அவரை திட்டியுள்ளார். இதனால் குழப்பமடைந்த கதிர் நேரடியாக வீட்டிற்கு வந்து அப்பா தன்னை இப்படியெல்லாம் திட்டினார் என்று கூறவே ராஜீ அதற்கு நக்கலாக சிரித்தார்.

பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி கதிரிடம் விளக்கினார். அப்போதுதான் கதிருக்கு புரிந்தது. அதற்கு கதிர் நீ அரசி மீது பாசமாக இருப்பது எல்லாம் சரி தான். அதற்கு என்னை வில்லனாக்கிவிட்டால் எப்படி என்று கேட்க, அதற்கு நல்ல விஷ்யத்திற்கு வில்லனாக இருந்தால் தப்பில்லை என்றார் ராஜீ. அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 513ஆவது எபிசோடு முடிந்தது.