Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 507ஆவது எபிசோடில் அரசி மற்றும் குமாரவேலு தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
Pandian Stores 2 : விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில், அரசி தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு குமாரவேலு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு நாள்தோறும் ஒரு சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது. குமாரவேலுவின் ஒவ்வொரு அடிக்கும் பதிலடி கொடுக்கிறார் அரசி.
கடந்த வாரம் செமஸ்டர் ரிசல்ட் வந்தது. இதில், ராஜீ 81 சதவிகித மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெற, கதிர் 4 பாடங்களில் தோல்வி அடைந்திருந்தார். இதே போன்று அரசியும் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இதன் காரணமாக காந்திமதி இருவரும் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்துவிட்டு வரம்படி கூறினார். இதனால் குமாரவேலு மற்றும் அரசி இருவரும் கோயிலுக்கு புறப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்றைய 507ஆவது எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதில், அரசி மற்றும் குமாரவேலு இருவரும் முதலில் இளநீர் குடிக்க வந்த போது அங்கு ராஜீ மற்றும் கதிர் இருவரும் இளநீர் குடித்துக் கொண்டிருந்தனர். அரசியை குமாரவேலு மிரட்டவே கோபத்தில் கொந்தளித்த குமாரவேலுவை அடிக்க பாய்ந்தார். ஆனால், அரசி அதனை தடுத்து நிறுத்தினார். இதன் தொடர்ச்சியாக இருவரும் அரசியின் கடைக்கு சென்றனர். அங்கு அரசியை பார்த்த பாண்டியன் கோபத்தில் கொந்தளித்தார். அதன் பின்னர் ரோட்டில் வைத்து குமாரவேலு மற்றும் அரசி இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
அவர் சென்ற பிறகு மீண்டும் இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர். இதையடுத்து அரசி மீண்டும் உதவி ஆய்வாளரை அழைத்து குமாரவேலு மீது புகார் அளிக்க, அவர மிரட்டியதைத் தொடர்ந்து சண்டை போடவில்லை. சும்மா பேசிக் கொண்டு இருந்தோம். அப்படி இப்படி என்று குமாரவேலு ஆக்டிங் கொடுத்தார். இனியும் பிரச்சனை செய்தால் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடு, நான் பார்த்துக் கொள்கிறேன். எஃப் ஐ ஆர் போட்டு உள்ளே தள்ளினால்தான் புத்தி வரும் என்று மிரட்டினார்.
