Pandian Stores 2 Venkat Renganathan New Shop Opening : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர் வெங்கட் புதிதாக கடை ஒன்றை திறந்துள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.
Pandian Stores 2 Venkat Renganathan New Shop Opening : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வெங்கட் ரங்கநாதன். தமிழகத்தில் பழனியில் பிறந்து வளர்ந்த வெங்கட் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். இதில், அதிகளவில் அவர் பிரபலமான சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் இந்த சீரியலானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதில், பாண்டியனின் முதல் தம்பியாக நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதுமட்டுமின்றி மீனா என்ற ரோலில் நடித்து வரும் ஹேமா மற்றும் வெங்கட் ஆகியோரது சீரியல் கெமிஸ்டரி ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கனா காணும் காலங்கள், மாயா, புகுந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே, ரோஜா என்று பல சீரியல்களில் நடித்துள்ளார்
ஒரு சில சீரியல்களில் சிறப்புத் தோற்றத்திலும் வந்து சென்றுள்ளார். அதோடு, ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீர்யலில் பாண்டியனுக்கு 2ஆவது மகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலிலும் மீனாவிற்கு கணவராக வருகிறார். சீரியலின் ஆரம்பத்தில் நடிகர் வம்சி நடித்து வந்த நிலையில் அவருக்குப் பதிலாக வெங்கட் ரங்கநாதன் நடித்து வருகிறார்.
https://www.instagram.com/reel/DKo7w8lRXaz/?utm_source=ig_web_copy_link
இப்போது இந்த சீரியலில் பாண்டின் ஸ்டோர்ஸ் சூப்பர் மார்க்கெட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இது இவருடைய அப்பாவின் கடை. அதுமட்டுமின்றி மாமனாரின் ஆசையைத் தொடர்ந்து அரசு வேலைக்காவும் முயற்சி செய்கிறார். இதற்காக ரூ.10 லட்சம் கொடுத்து அரசு வேலை வாங்க துணிந்துள்ளார். ஆம், மாமனாரிடம் ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்து அரசு வேலை வாங்க காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில் தான் வெங்கட் ரங்கநாதன் புதிய பிஸினஸ் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சென்னையில் புதிய ஒன்றை திறந்திருப்பதை வெளியிட்டுள்ளார். அப்படி என்ன கடை திறந்திருக்கிறார் என்று பார்த்தால் டெசர்ட்ஸ் கடை (இனிப்பு வகைகள் அடங்கிய கடை) ஒன்றை திறந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ஹலோ மக்களே போரூர் மெட்ராஸ் ஃபுட்வாக் ல தெரபி டெசர்கர்ட்னு டெசர்ட்ஸ் கடையை உங்கள் நண்பன் நான் வெங்கட் திறந்திருக்கிறேன். இதில் தரமான பாஸ்ட்ரீஸ் கிடைக்கும், மில்க் ஷேக் கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஆதரவு கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.