Pandian Stores 2 Serial Update : அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து அவரது மாமனாரிடம் செந்தில் கொடுத்துள்ளது மீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pandian Stores 2 Serial Update : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. குடும்பத்தோடு கண்டு ரசிக்கும் சீரியல்களில் இந்த சீரியலும் ஒன்று. ஏராளமானோ இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று குடும்பக் கதையை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த சீரியலில் அக்கா மற்றும் அண்ணன், தம்பிகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் கடைசியாக தங்கை அரசிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதற்குள்ளாக அரசி யாருக்கும் தெரியாமல் தனக்கு தானே திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அது வேறு யாருமில்லை, அரசிக்கு சொந்த தாய்மாமா மகன் தான். என்னதான் ரெண்டு வீட்டுக்கும் பகை இருந்தாலும் அரசி அவரை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க செந்தில் தனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்தார். இதற்கு மீனா மட்டுமின்றி அவரது அப்பாவும் ஆதரவு தெரிவித்து வந்தார். அவர் மூலமாக குன்றத்தூரிலேயே அரசு வேலை வாங்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதற்கு ரூ.10 லட்சம் கட்ட வேண்டும். இது குறித்து பாண்டியனிடம் கேட்டும் முடியாது என்று கூறிவிட்டார். அதன் பிறகு அரசிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால், செந்தில் ரூ.10 லட்சம் கொடுப்பது பற்றி யோசிக்கவே இல்லை.
அரசி திருமணம் செய்த நிலையில், ரூ.10 லட்சம் பணத்தை வங்கியில் போட சொல்லி பாண்டியன் கொடுத்துள்ளார். ஆனால், செந்தில் அந்த பணத்தை அவரது மாமனாரிடம் கொடுத்து அரசு வேலை வேண்டும் என்று கேட்டுள்ளார். அவர் எதிர்பார்த்த மாதிரி அரசு வேலை கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் என்ன வேலை கிடைக்கும்? என்பது குறித்து பொற்றுத்திருந்து பார்க்க வேண்டும்.
இது குறித்து செந்தில் மீனாவிடம் தெரியப்படுத்தவே அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏற்கனவே அரசு வேலைக்கு ரூ.10 லட்சம் கொடுக்க கூடாது என்று மீனா அவரிடம் கூறியிருந்தார். அப்படியிருக்கும் போது அதையும் மீறி செந்தில் கொடுத்தது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை இனி வரும் காலங்களில் பொறுமையாக இருந்து பார்க்கலாம்.
