மலையாள திரையுலகில் ஹாட் டாபிக் செய்தி என்றால், நடிகை பாவனாவின் பாலியல் வன்கொடுமைதான் , இதனை கேள்வி பட்ட அணைத்து இந்திய திரையுலகினரும் அவருக்கு ஆதரவாக களமிறங்கினர்.
மேலும் குற்றவாளியை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் எனவும் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், பாவனாவை காரில் கடத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய சம்பவம் குறித்து கேரளா போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான, பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் குமார் போலீசாரிடம் இன்று சரண் அடைந்துள்ளார் .
பல்சர் சுனில் குமாரை போலீசார் இன்று கொச்சி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள போலீசார், பல்சர் சுனில் குமாரிடம் முழு விசாரணை மேற்கொண்ட பிறகுதான், இந்த சம்பவத்தில் யார் யாருக்கு தொடர்பு உண்டு என தெரியவரும் என கூறியுள்ளனர்.
மேலும் இதில் தொடர்புடைய பிரபலங்கள் பற்றி தெரிந்ததா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, முழு விசாரணை முடிந்ததும் இதில் தொடர்புடைய அனைத்து பிரபலங்கள் மற்றும் இதற்கு பின்னல் உள்ள அனைவரின் தகவல்களும் வெளியிட படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
