ராகவா லாரன்ஸ் - நடிக்கும் படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்..!

சமீப காலமாக பழைய பாடல்களை, ரீமேக் செய்து வெளியிட்டு வரும் நிலையில், தற்போது 'பாடாத பாட்டெல்லாம்' பாட்டை ரீமேக் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Padatha Patellam Remix song in Raghava Lawrence  ruthran movie official information

சமீப காலமாக பழைய பாடல்களை, ரீமேக் செய்து வெளியிட்டு வரும் நிலையில், தற்போது 'பாடாத பாட்டெல்லாம்' பாட்டை ரீமேக் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் திரைப்படம் “ருத்ரன்”. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்  நடித்து வருகிறார்.

Padatha Patellam Remix song in Raghava Lawrence  ruthran movie official information

படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை  ரீமிக்ஸ் செய்துள்ளனர். இந்த பாடலுக்காக ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்.

Padatha Patellam Remix song in Raghava Lawrence  ruthran movie official information

“ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில்... நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு G.V.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்திற்கு K.P.திருமாறன் கதை, திரைக்கதை எழுத ,5 ஸ்டார் கதிரேசன் இயக்கி வருகிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios