ராஜராஜ சோழனிடமிருந்து இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போய் பண்டைய மன்னர்களையும் வம்பிழுப்பாரோ என்று மக்கள் பயந்துகொண்டிருந்த நிலையில் அடுத்து ஒரு வழியாக மீண்டும் படம் இயக்கும் முடிவுக்கே வந்திருக்கிறாராம் இயக்குநர் பா.ரஞ்சித்.

‘அட்டக்கத்தியில் துவங்கி ‘காலா’ வரை மிகக் குறைந்த படங்களிலேயே தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்த பா.ரஞ்சித், அடுத்து இந்தியில் சுதந்திரப்போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் கதையை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார்.ஆனால் அந்த அறிவிப்பைக் கிடப்பில் போட்டுவிட்டு தலித் அரசியல் பேசுவதும் மன்னர் ராஜராஜனை தரக்குறைவாக விமர்சிப்பதுமான சர்ச்சையில் சிக்கினார். இதனால் பல வழக்குகளை அவர் சந்திக்க நேர்ந்தது.

இந்த நிலையில் ரஞ்சித் வெறுப்பாளர்கள் சிலர் ‘இனிமே இவர் படம் இயக்கமாட்டார். இப்படி பொதுவெளிகள்ல வம்பு வளர்த்துக்கிட்டே காணாமப் போயிடுவார்’என்று கமெண்ட் அடித்து வந்தனர்.இந்நிலையில், பா.ரஞ்சித் மல்டி ஸ்டார் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஆர்யா, ராணா மற்றும் சத்யராஜ் ஆகிய மூவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் மேலும் ஒருசில பிரபலங்கள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காண்ட்ரவர்சி பண்ணுங்க வேணாங்கலை... ஆனா அப்பப்ப படமும் பண்ணுங்க பாஸ்...