Asianet News TamilAsianet News Tamil

என்னை கோபப்படுத்தாதீங்க… நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் !! கொந்தளித்த ரஞ்சித் !!

என் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் நான் அம்பேத்கரின் வளர்ப்பு.  எவனுக்கும் பயப்படமாட்டேன்.   நான் இப்படித்தான் பேசவேண்டும் என்று  யாரும் வரையறை செய்யக்கூடாது என்று விழா ஒன்றில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், என்னை கோபப்படுத்தாமல் பார்த்க்கொள்ளுங்கள் என கூறினார்.

pa.ranjith speech rajarajan again
Author
Chennai, First Published Jul 27, 2019, 10:15 PM IST

ராஜராஜ சோழன் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கும்பகோணம் அருகே பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் கைது ஆகாமல் இருக்க முன் ஜாமின் பெற்றார் ரஞ்சித். 

இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித்  ராஜராஜசோழன் பற்றி ரஞ்சித் பேசும்போது எப்படி பார்க்கப்படுகிறது.  ரஞ்சித் அல்லாதவர்கள் பேசும்போது எப்படி பார்க்கப்படுகிறது.    மற்றவர்கள் பேசும்போது அமைதியாக இருந்த உலகம் ஊடகம் ரஞ்சித் பேசும்போது ஏன் விழிப்படைந்தது? என கேள்வி எழுப்பினார்.
 pa.ranjith speech rajarajan again
ராஜராஜசோழன் பற்றி பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றீர்களா என்று கேட்கிறார்கள்.  ஆனால், நான் பேசியதால் மற்றவர்கள்தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.    ராஜராஜன் உயிரோடு இருந்திருந்தால் என் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்.    வாங்க விவாதம் செய்யலாம் என்று கூறியிருப்பார்.  ஆனால், ராஜராஜன் பேரன்கள் வேறு வேறு சாதியில் இருப்பதால் அந்த பேரன்கள் எல்லாம் மன உளைச்சல் அடையுறானுங்கஎன குறிப்பிட்டார்.  

pa.ranjith speech rajarajan again 
 
நிலம் குறித்த இந்த விவாதம் தேவைதான். ஏன் என்றால் எனக்கு நிலம் இல்லை?  இதுதான் எளிமையான கேள்வி. இவரு ஜமீன் பரம்பரை இவருகிட்ட ஒருந்து நிலத்தை எடுத்துக்கிட்டாங்களாம் என்று ஒருவர் பேசுறாரு.   தலித்துக்கு ஏது நிலம் என்று ஒருவர் பேசுறாரு.  தலித்கிட்ட நிலம் இல்லை என்று உன்னால் எப்படி பேச முடியுது.  தலித்கிட்ட எப்படி நிலம் இல்லாமல் போயிருக்கும்?

pa.ranjith speech rajarajan again
 
நான் வந்து ஒரு குற்றச்சாட்டை வைக்கிறேன்.  அதற்கு நீ பதில் சொல்லு.   நான் பேசியது மூலமாக வழக்கை தொட்டிருக்கிறேன். எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.  அதற்காக நான் பேசவில்லை என்று எங்கேயும் மறுக்கவில்லை.    

நான் அம்பேத்கரின் வளர்ப்பு.  எவனுக்கும் பயப்படமாட்டேன்.   நான் இப்படித்தான் பேசவேண்டும் என்று நீ வரையறை செய்யாதே.    என்னை கோப்படுத்தாமல் பார்த்துக்கோங்க என்று இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையாக தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios