வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஹீரோயினாக, பா.ரஞ்சித் பட ஹீரோயின் அறிமுகமாக உள்ளது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஹீரோயினாக, பா.ரஞ்சித் பட ஹீரோயின் அறிமுகமாக உள்ளது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் 'கைதி' படத்தில் வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் அர்ஜுன் தாஸ். ஏற்கனவே இவர் அட்லி தயாரிப்பில் வெளியான 'அந்தகாரம்' என்கிற படத்தில் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான விஜய்யின் 'மாஸ்டர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது அர்ஜுன் தாஸ், தேசிய விருது இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்க உள்ள படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ள தகவல் நேற்று வெளியான நிலையில், இன்று ஹீரோயின் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

'ஆல்பம்' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் 'காவியத்தலைவன்', 'அங்காடித்தெரு', என வரிசையாக முத்தான படங்களை இயக்கி ரசிகர்களின் கண்ணுக்கு விருந்து படைத்து வரும் வசந்த பாலன் இயக்கி முடித்துள்ள 'ஜெயில்' படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய பள்ளி நண்பர்களுடன் அர்பன் ஸ்டூடியோ என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி உள்ள வசந்தபாலன் முதல்முறையாக, இயக்கி - தயாரித்துள்ள படத்தில் நடிகை துஷாரா நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே 'போதை ஏறி புத்தி மாறி' மற்றும் பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'சார்பட்டா' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
