இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது தங்கலான் படத்தை இயக்கி வரும் நிலையில், இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கி முடித்த கையேடு பா.ரஞ்சித் யாரை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் என நடிகர் விக்ரமுடன் இணைய உள்ளதை உறுதி செய்தார். தற்போது விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும், 'தங்கலான்' படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது இந்த படம் குறித்த புகைப்படம் மற்றும் அப்டேட் வெளியாகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட காசு கொடுத்து ஓட்டு வாங்குகிறீர்களா 3 போட்டியாளர்கள்? கிளம்பிய புது சர்ச்சை..!

இதுவரை தமிழில் சொல்லப்படாத கதையான, தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் இப்படம் ஒரு பீரியட் பிலிமாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில், இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக மிகப்பெரிய தாடி, மீசை, மற்றும் முடியுடன் வலம் வரும் விக்ரம்... சமீபத்தில் கூட ஒக்கேனக்கல் பகுதியில் படப்பிடிப்பு முடிந்ததும், இயக்குனர் பா ரஞ்சித் உட்பட படக்குழுவினரோடு தண்ணீரில் குளித்து மகிழ்ந்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித், டிசம்பர் 8 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், இயக்குனர் பா ரஞ்சித் தங்கலான் படப்பிடிப்பில், நடிகர் விக்ரமுடன் இருக்கும் போஸ்டர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் வைரலாகி வருவதோடு... ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் அதிர்ச்சி... ரஜினி, விஜய், அஜித் படங்களில் நடித்த காமெடி நடிகர் சிவநாராயணமுர்த்தி திடீர் மரணம்!

Scroll to load tweet…