பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ஹிட் படங்களை கொடுக்காமலேயே தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிகப்படியான இளைஞர்கள் இவருக்கு ரசிகராக மாறியுள்ளனர்.

ஓவியா ஆர்மி, ஓவியா ரசிகர்கள் என ஓவியா மீது நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பு கூடிக்கொண்டே போகிறது.

தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியா சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  பின் அவருடைய சொந்த ஊருக்கு சென்று ஆண்களை போல் ஹேர் கட் செய்துக்கொண்டார் என்று பல தகவல்கள் மற்றும் அவருடைய புகைப்படமும் வெளியானது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் வரவேற்கப்பட்ட பரணி மற்றும் ஓவியா வெளியேறியதால். இந்த நிகழ்ச்சியில் டிஆர்பி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக மாற்ற ஓவியாவையும், பரணியையும் wile gurad சுற்றில் நேரடியாக உள்ள கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

இதற்கு இடையில் தற்போது ஓவியா தன்னுடைய கவலைகளை மறக்க கேரளாவில் தன் தோழியான ரம்யா நம்பீசன் வீட்டில் இருக்கிறாராம். ஓவியாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்கள் இது குறித்து பேசிவருவதாகவும் கூறப்படுகிறது.