பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஓட்டு மொத்த தமிழ் ரசிகர்களில் ஆதரவையும் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் கடந்த சில நாட்களாகவே தன்னுடைய மனநிலை சரி இல்லை மருத்துவரிடம் தன்னை அழைத்து செல்லுமாறு கூறி இருந்தார்.

இதனை கடந்த வாரம், கமலஹாசனிடமே நேரடியாக தெரிவித்தார் ஓவியா... இதற்கு கமல் இல்லாத நோய் இருப்பதாக கூறுகிறீர்கள் என கூறினார் ஓவியாவிடம்.

இந்நிலையில் ஒரு சில நாட்களாக ஓவியாவை காதலிப்பது போல் நடந்துக்கொண்டு ஆரவ் அவரை வெறுத்தால், தற்கொலைக்கு முயற்சித்து தண்ணீருக்குள் மூழ்கினார். இதனை முதலில் பார்த்த ஆரவ் அனைத்து போட்டியாளர்களிடம் கூற அனைவரும் சென்று ஓவியாவை காப்பாற்றி வெளியே கொண்டு வந்து விட்டனர்.

தற்போது இவரை மருத்துவரின் ஆலோசனை படி ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு தற்காலிகமாக வெளியேற்றியுள்ளனர். சிகிச்சைக்கு பின் மீண்டும் இந்த போட்டியில் ஓவியா களமிறங்குவார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.