oviya talk about his fans
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களையும் கொள்ளையடித்தவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் படங்களில் நடிக்க வாய்புகள் குவிந்து வருகிறது.
அதே போல் ஓவியாவும் தற்போது 'காஞ்சனா 3' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தற்போது கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள ஒரு திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் இவர் நேற்று ட்விட்டர் மூலம் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து பேச உள்ளதாக தெரிவத்தார். அதன் படி தன்னுடைய ரசிகர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஓவியா வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார். அதில் ஒருவர் ஓவியா நீங்கள் எனக்கு பதில் கொடுக்க வில்லை என்றால் உங்கள் பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துக்கொள்வேன் என கூட மிரட்டினார்.
இப்படி கேள்விக்கு பதில் கொடுத்த ஓவியா...
