oviya support kamal not rajini why?

நேற்றைய தினம் தன்னுடைய ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, கோயம்புத்தூருக்கு சென்று தன்னுடைய ரசிகர்களை சந்தித்த பின், செய்தியாளர்களை சந்தித்தார் ஓவியா.

அப்போது தன்னைக்கு பல கோடி மக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நான் கண்டிப்பாக எதாவது செய்வேன் என பிக் பாஸ் மேடையில் கூறியுள்ளேன். அது அவர்களுக்காக இல்லை எனக்காக என்னுடைய மன திருப்திக்காக என தன்னுடைய மனதில் உள்ளதை கூறினார்.

பின் செய்தியாளர்கள் நீங்கள் கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரில் யார் அரசியலுக்கு வந்தால் அவர்களுடன் இணைந்து அரசியல் பணியில் ஈடுபடுவீர்கள் என கேட்டனர்.

இதற்கு பதிலளித்து ஓவியா... பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் தனக்கு கமலஹாசனை பற்றி தனக்கு நன்றாக தெரியும். அவர் ஏற்கனவே மிகவும் பிரபலமானவர், அவரிடம் நிறைய பணமும் உள்ளது அதனால் கண்டிப்பாக அவர் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு தான் அரசியக்கு வருவார். அவர் அரசியலுக்கு வந்து எனக்கு அழைப்பு விடுத்தாள் நான் கண்டிப்பாக அவருடன் இணைத்து பணியாற்றுவேன் என கூறினார்.

பின் ரஜினிகாந்த் குறித்து பேசிய ஓவியா அனைத்து நடிகர்களுக்கும் ரஜினி சாரை மிகவும் பிடிக்கும் நானும் அவருடைய தீவிர ரசிகை தான். ஆனால் நான் இது வரை ரஜினி சாரை பார்த்தது இல்லை. அதனால் அவருக்கு நான் எந்த வகையில் உதவ முடியும் என தெரியவில்லை என கூறினார்.