ஜூலி ஒட்டு மொத்த போட்டியாளர்கள் அனைவராலும் நடிக்கிறார் என ஒதுக்கப்பட்டபோது, அவர் மீது பாவப்பட்டு அவருக்கு ஆறுதல் கூறி உண்மையான தோழியாக இருந்தவர் ஓவியாதான்.

ஆனால் ஜூலி ஒரு பச்சோந்தி என்பதை நிரூபிக்கும் விதத்தில் ஓவியாதான் தன்னை குழப்பி விட்டுவிட்டார் என கூறி தன்னை நல்லவள் என்பது போல் அனைவர் முன்னிலையிலும் காட்டிக்கொண்டு ஓவியாவை அனைவருக்கும் எதிரியாக்கி விட்டுவிட்டார்.

இந்நிலையில் ஓவியாவை தூங்கவிடாமல் "நமிதா, ஜூலி, ரைசா, மற்றும் காயத்ரி அனைவரும் ஓவியாவை கிண்டல் செய்து "திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்" என்றும் ஓவியாவை குறை கூறுவது போல பல வார்த்தைகளை விட்டு கலாய்த்தனர்.

அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வெளியே சென்ற ஓவியா "உங்கள் எல்லையை மீறுகிறீர்கள் என்று கூறி செல்ல, அதற்கு "ஜூலி... ஓவியா நீ பண்றது சரி இல்லை" என்று குரலை உயர்த்துகிறார். ஒரு நிலையில் பொறுமையை இழந்த ஓவியா பீப் போடும்படி கெட்ட வார்த்தையால் ஜூலியை நாறடித்து விட்டார்.

மேலும் இதை கேட்டு கொந்தளித்த ஜூலி டம்மி துப்பாக்கி போல் சில நிமிடம் சீன் போட்டார்... ஆனால் ஓவியா போடி... போடி... என்று தூசி போல அவரை உதறி விட்டு கெத்தாக சென்றார்.