oviya rejected lazy award

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை சிநேகன் தொடர்ந்து மட்டம் தட்டி வருகிறார். பிக் பாஸ் விருது வழங்கும் வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் ஓவியாவை சிநேகன் மட்டம் தட்ட விருதை நீயே வைத்துக்கொள் சினேகனை அவமானப்படுத்தி விட்டு ஓவியா சென்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும் சில நேரம் எரிச்சலடையும் வகையிலும் மாறி வருகிறது.
நேற்று பிக் பாஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் 8 வகையான விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் பாசிட்டிவான பாராட்டும்படியான விருதுகளை தனக்கு வேண்டியவர்களுக்கும் நெகட்டிவான இழிவுபடுத்தும் வகையில் உள்ள விருதுகளை பிடிக்காத அட்டைகளுக்கு வழங்கினார்.ஏற்கெனவே சினேகனுடன் ஓவியா மோதலில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று தனக்கு கிடைத்த வாய்ப்பை சிநேகன் பிக் பாஸின் சோம்பேறி விருதை ஓவியாவுக்கு வழங்கினார்.
விருதை பெற்றவுடன் கடுப்பான ஓவியா “சோம்பேறி அவார்ட் நல்லாருக்கு.. எனக்கு ஏற்ற அவார்டா இதை நான் கருதவில்லை.. என்னுடைய சுபாவம் வேறு.. அதனால் இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கோவமாக இறங்கி சென்றார்.அப்போது இடைமறித்த சிநேகன் விருதை வாங்காமல் செல்லக்கூடாது என்று தெரிவித்தார்.

அப்படியானால் அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்து விட்டு சென்று விட்டார்.
இது பிக் பாஸ் குழு மத்தியில் பிக் பாஸ் லீடர் சினேகனுக்கு அவமானம் என்றுதான் சொல்லவேண்டும்.