oviya new movie leeked for famous actor
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டவர் நடிகை ஓவியா.
இந்த நிகழ்ச்சியில் இருந்து இவர் பாதியில் வெளியே வந்து பிக்பாஸ் பட்டத்தை தவற விட்டாலும், மக்கள் மனதை வென்று விட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
தற்போது இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் இவர் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 3 படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், தான் ஓவியாவுடன் டான்ஸ் ஆடும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஓவியா நடித்த படத்தின் தற்போதைய புகைப்படம் வெளியானதை ஓவியா ரசிகர்கள் பலர் வைரலாக்கி வருகின்றனர்.
