Asianet News TamilAsianet News Tamil

“ரூ.56 லட்சத்தை ஏமாத்திட்டாங்க”... கதறும் ‘ஓவியா’ படத்தின் புதுமுக நடிகர்... போலீசில் பரபரப்பு புகார்...!

“ஓவியா ” என்ற படத்தின் தயாரிப்பாளர், புதுமுக நடிகரான கண்டீபன் ரங்கநாதன் என்பவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Oviya Movie hero cum producer file cheating complaint in cuddalore SP
Author
Chennai, First Published Dec 4, 2020, 7:17 PM IST

“ஓவியா ” என்ற படத்தின் தயாரிப்பாளர், புதுமுக நடிகரான கண்டீபன் ரங்கநாதன் என்பவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகார் மனுவில், “நான் ஓவியா என்னும் தமிழ் திரைப்படத்தை எனது தயாரிப்பு நிறுவனான Himalayan Entertainment மூலமாக தயாரித்து நடித்துள்ளேன், இந்த படத்தை எனது பெயரில் Guild (கில்ட்) தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவும் செய்துள்ளேன். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு ஆகஸ்ட் 30, 2016-ல் இலங்கையில் முடிவடைந்தது. பின்னர் மே 2018-ல் இந்தியாவிற்கு வந்த ஓவியா படத்தினுடைய விற்பனை, விநியோகம் மற்றும் Post Production வேலைகளுக்கான Hard Disk ல் பதிவுசெய்து முழு கானொளிகளையும் Suriyanarayanan R, No.48, Raja Street, FCI Nagar, Semmandalam, Cuddalore, Indian, Tamil Nadu, Techno Soft Solutions Reg. No.16686 இவரிடம் ஒப்படைத்தேன். 

அன்று முதல் இன்று வரை படத்தொகுப்பு செய்த எந்த கானொளிகளின் Output Original Files எதையும் திருப்பித்தரவில்லை . அதுமட்டுமின்றி இந்த Post Production வேலைகளுக்காக என்னை ஏமாற்றி 13.04.2018 முதல் 20.08.2020 வரை Canadian Dolors 101.520.57 வாங்கியுள்ளார். தற்போதைய இந்திய பண மதிப்பிற்பு ரூ. 56,59,027.63/- (எழுத்தால் ரூபாய் ஐம்பத்தி ஆறு லட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து இருபத்தி ஏழு ரூபாய் அறுபத்தி மூன்று பைசா மட்டும்) வாங்கியுள்ளார் அளவுக்கு மீறி என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட பணமாகும். மேற்படி பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் இந்த படத்தினுடைய காணொளிகளையும் மற்றும் Movie Posters, Original Files மற்றும் Working Files தர மறுப்பதோடு கொடுக்கப்பட்ட வேலையை முடிக்காமல் இரண்டு வருட காலமாக என்னை ஏய்த்து கால தாமதப்படுத்தி ஏமாற்றி வருகிறார். 

Oviya Movie hero cum producer file cheating complaint in cuddalore SP

மேலும் இன்னும் அதிகப்படியான பணம் கேட்டு இவரும் மற்றும் இருவரது பெற்றோரும் என்னை மிகவும் மிரட்டி வருகிறார்கள்.

பணம் தரமுடியாவிட்டால் நான் கொடுத்த Materials ஐ அழித்துவிடுவேன் என்று கூறினார். ஒரு சமயத்திற்கு பிறகு Suriyanarayanan R மற்றும் இவரின் பெற்றோர்களும் சேர்ந்து, ‘கனடாவிலிருந்து எங்களை என்ன செய்ய முடியும் இங்கே வந்தால் உன்னை கொலை செய்து விடுவோம், நீ எங்கு புகார் கொடுத்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது’என்று  எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அதற்கு பயந்துக்கொண்டு எனது சொந்த வீட்டை அடமானம் வைத்து இவருக்கு பணம் கொடுத்து வந்தேன். உரிய நேரத்தில் படத்தை முடிக்காத காரணத்தினால் இன்று எனது சொந்த வீட்டையும் நான் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Oviya Movie hero cum producer file cheating complaint in cuddalore SP

இந்த சம்பவம் குறித்து நான் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 23.09.2020 அன்று புகார் கொடுத்தோம் புகாரில் மேற்கண்ட சூர்யநாராயணையும் அவரது பெற்றோர்களையும் என்னையும் விசாரணை செய்ததில் சூர்யநாராயணனும், அவரது பெற்றோர்களும் மறுநாள் ஆஜராக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர் அதிலிருந்து அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை . C.S.R. ரும் கொடுக்கப்படவில்லை நான் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வந்தேன். அதிலிருந்து என்னுடைய அன்றாட செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல், ரூம் வாடகை ரூ.3,00,000/- த்தில் ரூ.50,000/ மட்டுமே செலுத்தியுள்ளேன். அதனால் அந்த ஹோட்டல் நிர்வாகம் என்னுடைய Pass Port வாங்கி வைத்துக்கொண்டார்கள்.

எனவே மேற்கண்ட சூர்யநாராயணன் மீதும், அவரது பெற்றோர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து படத்தின் Hard Disk யை என்னிடம் திரும்ப தர வேண்டியும், நான் அவரிடம் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத்தருமாறும் அய்யா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios