oviya meet press in coyambatore

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஓவியா, நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அவரிடம் பத்திரிகையாளர்கள் நீங்கள் அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் மற்றும் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளித்த ஓவியா, அரசியல் என்பது ஜோக் இல்லை; மக்களுக்காக சேவை செய்யவேண்டும் என வருவது. மக்களுக்காக யாராவது உண்மையாக சேவை செய்ய வேண்டும் என்று முன் வந்தால் நான் கண்டிப்பாக அவர்களுக்கு சப்போர்ட் செய்வேன் என்று கூறினார். 

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் நீங்கள் CM ஆக ஆசைப்படுகிறீர்களா என கேட்டதற்கு, ஓவியா சற்றும் யோசிக்காமல் CMனு சொல்லி என்னை அசிங்கப்படுத்தாதீர்கள் எனக் கூறினார். இந்த பதில் ஒரு நிமிடம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.