'களவாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்த ஓவியா அடுத்தடுத்து நிறைய படங்கள் நடித்தாலும், அவரால் முன்னாடி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிக்க முடியவில்லை. 

வெள்ளித்திரையில் நடித்ததன் மூலம் இவருக்கு கிடைக்காத பெயர், புகழ், மற்றும் ரசிகர்கள். இவர் சின்னத்திரைக்கு வந்ததும் சாத்தியமாகியுள்ளது. இவர் பிக் பாஸ் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருடைய நடவடிக்கைகள் முதலில் கொஞ்சம் லூசு தனமாக இருந்தாலும். போக போக ரசிகர்கள் இவருடைய டான்ஸ், குறும்புத்தனம், இவரின் நடவடிக்கைகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் ஓவியா நடிப்பில் சீனு என்ற பெயரில் தயாராகி வந்த  படம் தற்போது ”ஓவியாவை விட்டா யாரு சீனு என்று பெயர் மாற்றப்பட்டு விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப்படத்தை தயாரிப்பாளர் மதுரை செல்வம் வெளியிட மிகவும் கஷ்டப்பட்டு வந்தாராம். 

இந்த தகவலை தெரிந்து கொண்ட ஓவியா தயாரிப்பாளருக்கு போன் செய்து, நீங்கள் கவலைப்படாதீர்கள், படத்தை ரிலீஸ் செய்ய தான் உதவுவதாகவும், மேலும் படம் எப்போது என்று சொல்லுங்கள் புரொமோஷனுக்கு நான் வருகிறேன். நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பணம் கொடுத்தால் தான் புரொமோஷனுக்கு வருவேன் என்று கூறும் நடிகைகள் மத்தியில், படத்தை ரிலீஸ் செய்ய பணத்தையும் கொடுத்து ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதாக கூறியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.