oviya give the kiss for aarav
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் பலருக்கு ஓவியாவை மிகவும் பிடித்தாலும், பிக் பாஸ் போட்டியாளர்கள் யாருக்கும் இவரை பிடிக்காது காரணம் இவர் யார் சொல்படியும் கேட்டமாட்டார் என்பதால் தான்.
சைத்தான் படத்தில் அறிமுகம் கொடுத்த ஆரவை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களிலேயே காதலிப்பதாக கூறி ஓவியா ஷாக் கொடுத்தாலும். அந்த காதல் நிலைக்காமல் சில வாரங்களிலேயே முறிந்தது.
தற்போது மீண்டும் ஆரவை மிகவும் தீவிரமாக காதலிப்பதாக, கூறி வருகிறார் ஓவியா. இந்நிலையில் நேற்றைய தினம் ஆரவ் பக்கத்தில் அமர்ந்து நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என கூறி அவரிடம் பேசி வந்தார். ஆனால் ஆரவ் எல்லாரும் இருக்காங்க சும்மா இரு என அவரை கண்டித்தார்.
மேலும் ஓவியாவை பிடிக்காதது போல முகத்தை வைத்துக்கொண்டார். ஆனால் ஓவியாவிற்கு காதல் பித்தம் தலைக்கேறி விடாமல் ஆரவை சுற்றி வந்து அவரை செல்லமாக அடித்து தன்னுடைய காதல் உணர்வை வெளிப்படுத்தி வந்தார். திடீர் என சண்டை போட்டுகொண்டு அவருடைய கையில் முத்தம் கொடுத்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார் ஓவியா.
இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆரவ் ஒரு நிமிடம் ஷாக் ஆகி நின்றார்.
