oviya full stop for rumer
நடிகை ஓவியா தமிழில் அறிமுகம் ஆகி, பல வருடங்கள் ஆனாலும் பெரிதாக ரசிகர்கள் கூட்டத்தையோ, முன்னணி நடிகை என்கிற இடத்தையோ பிடிக்க முடியாத நிலையில் இருந்தார். ஆனால் ஒரே மாதத்தில் அது தலை கீழாக மாறியது.

இவர் பட வாய்ப்புகள் இல்லாததால், தமிழில் பிரபல தொலைக் காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஒட்டு மொத்த ரசிகர்களில் அன்பையும் பெற்றார். பலர் இவரை ஆதரித்து சமூக வலைத்தளத்தில் பிரச்சாரமே செய்து ஓட்டு கேட்டனர் என்றால் பாருங்கள்... இவருக்கு எப்படிப் பட்ட வரவேற்பு இருந்திருக்கும் என்று.
இந்நிலையில் ஓவியா, தற்போது கமிட் ஆகி நடித்து வரும் காஞ்சனா 3, படத்தில் கால் ஷீட் கொடுத்துவிட்டு சரியாக படப் பிடிப்பில் கலந்துக்கொள்ளவில்லை என்றும் இதனால் ஓவியா அந்தப் படத்தை விட்டு விலகுவதாக கூறி வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இதனை நமது தளத்திலும் தெரிவித்திருந்தோம்.

தற்போது இதுகுறித்து விசாரிக்கையில் ஓவியா இந்தப் படத்தை விட்டு விலகியது வதந்தி என தெரிய வந்துள்ளது. மேலும் படக் குழுவினர் ஓவியா தங்களுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
