oviya dance vijay fame song aalaporan tamizhan in biggboss house
மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆளப் போறான் தமிழன்' பாடலுக்கு நடிகை ஓவியா நடனம் ஆடியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 19 பேர் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆரவ், கணேஷ், சினேகன்,ஹரீஷ் ஆகிய நால்வர் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று இரவு நடைபெறவிருக்கும் பிக்பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் பங்குபெற ஓவியா, பரணி, ஆர்த்தி, கஞ்சா கருப்பு, வையாபுரி, ரைசா, பிந்து மாதவி, சுஜா, காஜல், ஸ்ரீ, அனுயா, நமீதா, ஜூலி, சக்தி மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை புரிந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் அணிவகுத்து ஒருவர் பின் ஒருவராக உள்ளே செல்லும்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான்' தமிழன் பாடல் ஒளிபரப்பப்படுகிறது.
இந்தப் பாடலுக்கு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் நடனம் ஆடுகின்றனர். குறிப்பாக 'மக்கள் தலைவி' ஓவியா கஞ்சா கருப்பு மற்றும் ஆரத்தியுடன் இணைந்து இந்தப் பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார். இது அவரது ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
#VivoBiggBoss இன் இன்றைய இரண்டாவது ப்ரோமோ! @Vivo_India#BiggBossTamilpic.twitter.com/6HBDudcTtQ
— Vijay Television (@vijaytelevision) September 30, 2017
பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைத்து நாட்களும் காலையில் ஒளிபரப்பாகும் 'வேக்கப் சாங்'கிற்கு ஓவியா தவறாமல் நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
