Oviya come in Big boss again
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாகவே கலை இழந்து காணப்படுகிறது. ஓவியாவிற்காக இந்த நிகழ்ச்சியை பார்த்த பலர் இவர் வெளியேறியதும் இந்த நிகழ்ச்சியை பார்க்க பிடிக்கவில்லை என தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை ஊடகத்தின் மூலம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ, ஓட்டு மொத்த பார்வையாளர்கள் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்ட,ஜூலி, ஆர்த்தி, சக்தி, மற்றும் பரணி ஆகிய அனைவரும் ஓட்டுமொத்தமாக பிக் பாஸ் மேடையில் குவிகின்றனர்.
அப்போது யாரவது அடுத்து இருக்கிறீர்களா என கமல் கேட்க, பார்வையாளர்கள் அனைவரும் ஓவியா என கூறுகின்றனர். என்பது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மேலும் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள்ளே ஓவியா திரும்ப செல்ல மனம் இல்லை என்றாலும், ரசிகர்களையும் தொகுப்பாளர் கமலஹாசனின் அழைப்பை ஏற்று மீண்டும் பிக் பாஸ் மேடைக்கு அதிரடியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கண்டிப்பாக அனைவரும் இன்றைய நிகழ்ச்சியை மிஸ் பண்ணிடாதீங்க... அப்பறம் வருத்தப்படுவீங்க...
