ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது அவரை புரிந்து கொள்ளாதவர்கள் இப்போது அவர் வெளியே சென்றதும் தங்களுடைய தவறுகளை நினைத்து அழுது வருகின்றனர்.

தனியாக அமர்ந்து ஓவியாவை பற்றி அழுத்துக்கொண்டிருந்த சினேகனிடம், பிந்து மாதவி வந்து பேசும் போது... ஓவியாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்கிறார். 

இதற்கு சினேகன் அவளுக்கு நடிக்க தெரியாது, பொய் சொல்ல தெரியாது யாரையும் பற்றி தவறாக பேச மாட்டாள்.... அவளுடைய குணம் தெரியாமல் அனைவரும் அவரை தனிமை படுத்திவிட்டோமோ என தோன்றுகிறது. அவளுக்கு மன அழுத்தம் ஏற்பட இங்கு இருப்பவர்கள் அனைவரும் காரணம் என புலம்புகிறார்.

இதனை கேட்ட பிந்து மாதவி கண்டிப்பாக ஓவியா மீண்டும் வைல்ட் கார்டு  ரவுண்டில் மீண்டும் வருவார் என அழுது கொண்டிருக்கும் சினேகனுக்கு ஆறுதல் கூறுகிறார்.