நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்வை காதலிப்பதாக கூறி கடந்த சில நாட்களாக ஆரவை குட்டி போட்ட பூனை போல சுற்றி சுற்றி வருகிறார். ஆனால் ஆரவ் பல முறை ஓவியாவை திட்டியும் அவரை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். 

இவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலர், ஓவியாவை ஏமாற்றி விட்டார் ஆரவ் என தங்களுடைய எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தாலும். பாடலாசிரியர் தாமரை, ஆரவிற்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ஓவியாவின் இந்த செயல் மிகவும் மகாமட்டமானது என்றும், "ஓர் ஆணை இப்படியுமா பாலியல் சீண்டல் செய்வார் ஒரு பெண். 

அதுவே ஒரு ஆண் அங்கே உள்ள ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிக்க வற்புறுத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும் ! ஓவியாவின் செயல்கள் மகாமட்டம்," என அவர் தெரிவித்துள்ளார்.