இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பார்த்திபன், கடைசியாக 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்கிற வித்தியாசமான தலைப்புடன் கூடிய படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் ப்ரொமோஷன்யும், படம்  துவங்கிய நாளில் இருந்தே ஆரம்பித்து விட்டார் பார்த்திபன். அந்த வகையில் நாளை இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது.  இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் கலந்து கொள்வார் என எதிர்பார்கப்படுகிறது.

மேலும் ரசிகர்களை சிந்திக்க வைக்கும் வகையில், கான்டெஸ்ட்  ஒன்றையும் நடத்தினார். இதில் வெற்றி பெறுபவர்களை நிகழ்ச்சி மேடையில் சிறப்பிக்க உள்ளதாக ட்விட்டர்  பக்கத்தில் தெரிவித்தார். அதன் படி தற்போது, இந்த போட்டியில் வெற்றி பெற்ற ரசிகர்கள் 7 பேரின் பெயரை ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். 

இவர்கள் நாளை நடைபெற உள்ள, ஒத்த செருப்பு சைஸ் 7 பட விழாவில்  கௌரவிக்க பட உள்ளனர்.