ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் அவர்கள், உலக அளவில் பல இசை நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று சென்னை பணையூர் அருகே "மறக்குமா நெஞ்சம்" என்ற தலைப்பில் அவருடைய லைவ் கான்செர்ட் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவிற்கு பல பெருமைகளை தேடித் தந்த இசை புயல் ஏ. ஆர் ரகுமான் அவர்கள் படங்களுக்கு இசையமைப்பதோடு, வெளிநாடுகளிலும், இந்தியாவில் உள்ள பல இடங்களிலும் தொடர்ச்சியாக இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். 

அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 12ம் தேதி மாலை சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸ் என்ற பகுதியில் "மறக்குமா நெஞ்சம்" என்ற தலைப்பில் அவருடைய இசை நிகழ்ச்சி நடக்கவிருந்தது.

Sathyaraj Mother Death: சத்யராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர் பாபு அஞ்சலி!

இந்த இசை நிகழ்ச்சி குறித்து நேற்று ஏ. ஆர் ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார், அதில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற அக நக பாடலை இரண்டு முன்னணி பாடகிகள் பயிற்சி எடுப்பதையும், ரகுமானின் குழு அதற்காக தயாராகி வரும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

View post on Instagram

ஆனால் கடந்த ஒரு வார காலமாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருவதால், இன்று மாலை நடக்கவிருந்த "மறக்குமா நெஞ்சம்" இசைக்கச்சேரி வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Scroll to load tweet…

ரம்யா பாண்டியன் தங்கையோடு நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணமா? சமூக வலைத்தளத்தில் சூடாக்கிய தகவல்!

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ. ஆர் ரகுமான் அவர்கள் "எனது அன்பான நண்பர்களே, வானிலை மோசமாக இருப்பதினாலும், தொடர் மழையின் காரணமாகவும், எனது அன்புக்குரிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியத்தை மனதில் வைத்தும், அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படியும் இன்று நடக்கவிருந்த இசை கச்சேரி வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். மேலும் நமது உடல் நலமே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.