Oscar awards christopher Nolan dongurk
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் 90 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் உலகப் போர் குறித்த கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டன்கர்க் 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு தற்போது வரை 3 விருதுகளை அள்ளியுள்ளது.
சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. . 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2-வது முறையாக தொகுத்து வழங்கினார். ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு விருதுகளுக்கான போட்டியில், திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசவுரி என்ற படம் 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் டன்கர்க் திரைப்படம் 8 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தி ஷேப் ஆப் வாட்டர் திரைப்படம் 13 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கிறிஸ்டோபர் நோலனின் இரண்டாம் உலகப்போர் பற்றிய டன்கிர்க் படம் சிறந்த படத்தொகுப்பு, ஒலிக்கலவை மற்றும் சவுண்ட் எடிட்டிங்கிற்காக 3 விருதுகளை வென்றுள்ளது.

சிறந்தபடம்: த்ரிபில்போர்ட்ஸ்அவுட்சைட்எப்பிங்மிசெளரி
சிறந்த துணை நடிகர் -சாம் ராக்வெல், படம்: த்ரி பில்போர்ட்ஸ் சைட் எப்பிங் மிசவுரி 49 வயதான சாம் ராக்வெல் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை முதல் முறையாக பெறுகிறார்.

சிறந்தசிகைஅலங்காரம் :கஸூஹிரோசுஜி
சிறந்தஆடைஅமைப்பாளர் : மார்க்பிரிட்ஜஸ், பான்டம்த்ரட்
சிகைஅலங்காரம் :கஸூஹிரோசுஜி,லூஸிசிப்பிக், டேவிட்மலினவ்ஸ்கிஆகிய 3 பேருக்குகிடைத்தது

சிறந்தமுழுநீளஆவணபடம்: இகாரஸ்
சிறந்தஒலிதொகுப்பு : டன்கிர்க்
சிறந்தஒலிதொகுப்பாளர்கள்: அலெக்ஸ்கிப்ஸன் , ரிச்சர்டுகிங்
சிறந்தகலைஇயக்குனர்விருது 3 பேருக்கு: பால்ஆஸ்ட்டர்பெர்ரி, ஜெப்ரிமெல்வின், ஷேன்வியூ: படம்: திஷேப்ஆப்வாட்டர்

சிறந்ததுணைநடிகை : ஆலிசன்ஜேனி: படம்: ஐடான்யா
இதில், சிறந்த வெளிநாட்டு மொழிப்படத்திற்கான விருது ஏ ஃபெண்டாஸ்டிக் உமன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிலி நாட்டுப்படமான ஏ ஃபெண்டாஸ்டிக் உமன் ஸ்பானிஷ் மொழியில் வெளியானது. படத்தின் இயக்குநர் செபாஸ்டியன் லிலீயோ ஆஸ்கர் விருதைப்பெற்றுக்கொண்டார்.
