ஆஸ்கார் விருது

90 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் டால்பி தியேட்டரில் கோலாகலமாக துவங்கியுள்ளது.சினிமாத் துறையில் மிக மிக உயரிய கௌவரவ விருதாக பார்க்கப்படுவது ஆஸ்கார் விருதுதான்.

மரியாதை

இதில் சினிமாவில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.இதில் இந்திய திரையுலகை சேர்ந்த நடிகர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.இது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்ரீதேவி,சசிகபூர்

அண்மையில் துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்த பழம்பெரும் நடிகர் சசி கபூருக்கும் ஆஸ்கார் விருது விழாவில் மரியாதை செலுத்தப்பட்டது.
இது குறித்து இந்திய திரை உலக சேர்ந்தவர்களும் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.