ops take rent house for actress home
முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைத்துள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார்.
இந்நிலையில் தன்னுடைய முதலமைச்சர் பதவியை கடந்த 5ஆம் தேதி ராஜினாமா செய்தார், இதனால் இதற்கு மேல் அவர் அந்த வீட்டில் வசிக்க முடியாது என கூறி பொதுப்பணித்துறை சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனால் தற்போது அரசு பங்களாவை காலி செய்து விட்டு , மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பின்புறம் பகுதியில் அமைத்துள்ள வீனஸ் காலனி முதல் தெருவில் அமைந்துள்ள , பழம் பெரும் நடிகை பத்மினியின் சகோதரி ராகினியின் வீட்டில் குடியேறியுள்ளார்.

ஓ.பி.எஸ் தற்போது குடியேறியுள்ள வீட்டின் ,இரண்டாவது மாடியில் நடிகை ராகினியின் மகள் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
