இன்று மே 1ம் தேதியான இன்று நடிகர் அஜித்குமார் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அனிருத், வெங்கட் பிரபு, கஸ்தூரி சங்கர்,ப்ரேம்ஜீ, சிவகார்த்திகேயன், வைபவ், நயன் தாரா, விக்னேஷ் சிவன் என தல அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல KJR ஸ்டுடியோஸ், சன் நெட்வொர்க்,அனிரூத்,  திங் ம்யூசிக் உள்ளிட்டோரும் அல்டிமேட் ஸ்டாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், ''எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!'' என கூறியுள்ளார்.

அதேபோல இயக்குனர் சுசீந்திரன்,  “உழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்த அஜித் அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அமைதியும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்நாள் முழுவதும் கிடைக்க என் வேண்டுதல்கள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.